/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கிராமத்தினர் முற்றுகை டிராக்டர்கள் பறிமுதல்கிராமத்தினர் முற்றுகை டிராக்டர்கள் பறிமுதல்
கிராமத்தினர் முற்றுகை டிராக்டர்கள் பறிமுதல்
கிராமத்தினர் முற்றுகை டிராக்டர்கள் பறிமுதல்
கிராமத்தினர் முற்றுகை டிராக்டர்கள் பறிமுதல்
ADDED : ஜூலை 13, 2011 02:55 AM
குஜிலியம்பாறை : பாளையம் பேரூராட்சி முத்தம்பட்டியில், மாரியம்மன் கோயில்
மானிய நிலமும், அருகே, பாளையம் முனியப்பன் செட்டியார் நிலமும் உள்ளது.
இரு
நிலங்களையும், நீளவாக்கிலான மிகப்பெரிய மண் கரை பிரிக்கிறது. இக்கரையை
அகற்றினால், தனது நிலத்திற்கு போக்குவரத்து வசதியும், நில மதிப்பும் கூடும்
என, நினைத்த முனியப்பன், நேற்று, இயந்திரங்களை அமைத்து மண்ணை
அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்த
பொது மக்கள், இயந்திரங்களை முற்றுகையிட்டு, வருவாய் துறையினருக்கு தகவல்
கொடுத்தனர். தாசில்தார் மலைச்சாமி, டி.எஸ்.பி., ஜீவா ஆகியோர் வாகனங்களை
பறிமுதல் செய்தனர்.


