கொலையில் சம்பந்தமில்லா நபர்கள் சேர்ப்பு போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல் ஆஜர்
கொலையில் சம்பந்தமில்லா நபர்கள் சேர்ப்பு போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல் ஆஜர்
கொலையில் சம்பந்தமில்லா நபர்கள் சேர்ப்பு போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல் ஆஜர்

மதுரை : மதுரையில் நடந்த கொலை வழக்கில், சம்பந்தமில்லாத நபர்களை சேர்த்ததாக சி.பி.ஐ.,யினரால் தொடரப்பட்ட வழக்கில், போலீஸ் உதவி கமிஷனர் குமாரவேல், முதலாவது விரைவு கோர்ட்டில் நேற்று ஆஜரானார்.
இவ்வழக்கில் சம்பந்தம் இல்லாதவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பதாக, கரிக்கோல்ராஜ் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் உத்தரவுப்படி, இவ்வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை மூன்றாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. இதில் தனுஷ்கோடி, மாடசாமி, போஸ்கோ உட்பட நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. சம்பந்தமில்லாத நபர்களை வழக்கில் சேர்த்ததாக இன்ஸ்பெக்டர் குமாரவேல், ஏட்டு முத்து ஆகியோர் மீது சி.பி.ஐ.,யினர் தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 2004ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மூன்றாவது விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. 'இக்கோர்ட்டில் விசாரணை நடந்தால், தீர்ப்பு ஒருதலை பட்சமாக இருக்கும். எனவே, வேறு கோர்ட்டிற்கு வழக்கை மாற்ற வேண்டும்,' என, குமாரவேல் தரப்பில் கேட்டு கொண்டதால், இவ்வழக்கு முதலாவது விரைவு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டது. சாட்சி விசாரணை நேற்று நடந்தது. குமாரவேல், ஏட்டு முத்து ஆகியோர் ஆஜராயினர். எஸ்.ஐ., விஸ்வநாதன், ஆறுமுகபெருமாள், பாஸ்கரன், ஜோசப் வாசுதேவன் ஆகியோர் நீதிபதி பொன் பிரகாஷ் முன் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். சாட்சி விசாரணை இன்றும் தொடர்கிறது.


