/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அரசின் சாதனை விளக்க வீடியோ காட்சி ஒளிபரப்புஅரசின் சாதனை விளக்க வீடியோ காட்சி ஒளிபரப்பு
அரசின் சாதனை விளக்க வீடியோ காட்சி ஒளிபரப்பு
அரசின் சாதனை விளக்க வீடியோ காட்சி ஒளிபரப்பு
அரசின் சாதனை விளக்க வீடியோ காட்சி ஒளிபரப்பு
கடலூர் : தமிழக அரசின் சாதனை விளக்க வீடியோ படக்காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் முதல்வர் ஜெ., பதவியேற்பு, அமைச்சர்கள் பதவியேற்பு விழா, தமிழக அரசின் சாதனை நலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து 'மலர்ந்தது அம்மாவின் பொற்கால ஆட்சி' தலைப்பில் செய்தி மலர் படக் காட்சி ஒளிரப்பப்படுகிறது.பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் இம்மாதம் முழுவதும் வாகனங்கள் மூலம் மாலை நேரங்களில் வீடியோ படக் காட்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.கிளிஞ்சிக்குப்பம், சிங்கிரிகுடியில் வரும் 8ம் தேதியும், புதுக்கடை, செல்லஞ்சேரியில் 9, காரணப்பட்டு, பள்ளிப்பட்டில் 10, நல்லாத்தூர், தென்னம்பாக்கத்தில் 11, தூக்கணாம்பாக்கம், எம்.பி.அகரத்தில் 12ம் தேதிகளில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.