விற்பனைக்காக சந்தையில் குவியும் கால்நடைகள் :இலவசம் எதிரொலி
விற்பனைக்காக சந்தையில் குவியும் கால்நடைகள் :இலவசம் எதிரொலி
விற்பனைக்காக சந்தையில் குவியும் கால்நடைகள் :இலவசம் எதிரொலி
ADDED : ஆக 07, 2011 01:54 AM
ராமநாதபுரம் : இலவச கறவை மாடுகள் வழங்குவதாக, அரசு அறிவித்ததை தொடர்ந்து, சந்தைகளில் விற்பனைக்காக கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
தேர்தல் வாக்குறுதிபடி, தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை குடும்பங்களுக்கு நான்கு ஆடுகள், அல்லது ஒரு கறவை மாடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே ஆடு, மாடுகள் இருந்தால் இலவசம் இருக்காது என்ற தகவல் பரவியதால், தங்களிடம் உள்ள ஆடு, மாடுகளை விற்று மக்கள் வருகின்றனர். ராமநாதபுரத்தில், மாடுகள் விற்கும் தரகர் ஒருவர் கூறியதாவது: மாட்டு சந்தைக்கு வாரத்துக்கு 60க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்கு வரும். கடந்த வாரம் 90 மாடுகள் கொண்டு வரப்பட்டன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அதிலும் கறவை மாடுகள் அதிகளவில் வந்திருப்பது, ஆச்சரியம். ஆடி மாதத்தில் இவ்வளவு மாடுகள் சந்தைக்கு வந்ததே இல்லை. ஆடுகள் வழக்கம்போல்தான் வருகின்றது. ஆடிமாதம் முடிந்த பின்பு அவற்றின் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது, என்றார்.