/உள்ளூர் செய்திகள்/சேலம்/1.50 கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் பயிற்சி1.50 கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் பயிற்சி
1.50 கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் பயிற்சி
1.50 கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் பயிற்சி
1.50 கோடி மதிப்பில் கம்ப்யூட்டர் பயிற்சி
ADDED : ஆக 25, 2011 02:16 AM
ஆத்தூர்: ''தமிழகம் முழுவதும், ஒரு லட்சம் மாணவ, மாணவியருக்கு, 1.50 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது,'' என,
ஆத்தூரில் நடந்த விழாவில், தே.மு.தி.க., மாநில துணைச்செயலாளர் இளங்கோவன்
பேசினார்.ஆத்தூரில், விஜயகாந்த் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம்
செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில், ஆத்தூர், தலைவாசல், நரசிங்கபுரம்
உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 410 மாணவ, மாணவியர் படித்து படித்து
வருகின்றனர். கம்ப்யூட்டர் பயிற்சி படிப்பு முடித்த மாணவ, மாணவியருக்கு
சான்றுகள் வழங்கும் விழா நடந்தது.தே.மு.தி.க., மாநில துணைச்செயலாளர்
இளங்கோவன், மாணவர்களுக்கு சான்றுகள் வழங்கி பேசியதாவது:தமிழகத்தில், சேலம்,
நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்பட, 60 இடங்களில், விஜயகாந்த் இலவச
கம்ப்யூட்டர் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதில், ஒரு லட்சத்து,
10 ஆயிரம் மாணவர்கள், கம்ப்யூட்டர் படிப்புகள் முடித்து சான்றுகள்
பெற்றுள்ளதோடு, தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளும் பெற்று
தரப்பட்டுள்ளது.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு கம்ப்யூட்டர் கல்வி
அடிப்படையாக உள்ளதால், ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம்
துவங்கப்பட்டது.
மாதம் தோறும் தலா, 20 ஆயிரம் ரூபாய் என, 12 லட்சம்
ரூபாயும், ஆண்டுக்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச கம்ப்யூட்டர்
பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில், ஆத்தூர்,
மேட்டூர், வாழப்பாடி மற்றும் சேலம் கிச்சிப்பாளையம் ஆகிய நான்கு இடங்களில்
நடத்தப்படும் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் படித்து
வருகின்றனர். இவ்வாறு பேசினார்.விழாவில், ஒன்றிய தலைவர் குமாரசாமி, மாவட்ட
இளைஞர் அணி துணை செயலாளர் விஜயபாஸ்கர், நகர மாணவர் அணி செயலாளர்
வெங்கடேஷ், பட்டதாரி ஆசிரியர் அணி நிர்வாகிகள் பரமசிவம், ரமேஷ், மகளிர் அணி
செயலாளர்கள் ஜெயம், சித்ரா, ஆத்தூர், நரசிங்கபுரம் நகரம், ஒன்றிய
நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


