ADDED : செப் 29, 2011 10:05 PM
திருப்பூர் : மாநகராட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட
வாய்ப்பு தராததால், ஆத்திரமடைந்த முன்னாள் கவுன்சிலர் தேவராஜ், தன்
ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.ஒருங்கிணைக்கப்படாத திருப்பூர் மாநகராட்சியில், 46வது
வார்டு கவுன்சிலராக இருந்தவர் தேவராஜ் (அ.தி.மு.க.,); வரும் உள்ளாட்சி
தேர்தலில் போட்டியிட, தேவராஜூக்கு கட்சி தலைமை வாய்ப்பு தரவில்லை.
ஆத்திரமடைந்த அவர், ஆதரவாளர்களுடன் காங்கயம் கிராஸ் ரோடு சிக்னல் அருகில்
நேற்று சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் போக்குவரத்து
பாதிக்கப்பட்டது.அங்கு வந்த போலீசார், தேவராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை
சமாதானப்படுத்தி கலைய வைத்தனர். இம்மறியலால் அப்பகுதியில் அரை மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.