தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி
தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி
தி.மு.க.வை பலவீனப்படுத்தவே வழக்குகள் : கருணாநிதி
ADDED : ஜூலை 21, 2011 06:29 PM
சென்னை : தி.மு.க.கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியாகவே, தி.மு.க.வினர் மீது தொடர்ந்து வழக்குகள் போடப்பட்டு வருவதாக தி.மு.க.தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தி.மு.க. கட்சியை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஆளுங்கட்சி களமிறங்கி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கட்சி பாகுபாடின்றி, புகார்களில் சிக்கும் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார். சமச்சீர் கல்வி வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், சுப்ரீம் கோர்ட் வழங்க உள்ள தீர்பபை, மாநில அரசு மதித்து நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.