நீர் ஆதாரம் அருகே சாயப்பட்டறை: எதிர்ப்பால் அகற்றம்
நீர் ஆதாரம் அருகே சாயப்பட்டறை: எதிர்ப்பால் அகற்றம்
நீர் ஆதாரம் அருகே சாயப்பட்டறை: எதிர்ப்பால் அகற்றம்
ADDED : செப் 23, 2011 11:59 PM

சின்னாளபட்டி: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவாரத்தில் சாயப்பட்டறை அமைக்கும் முயற்சி, கிராமத்தினரின் எதிர்ப்பால் முறியடிக்கப்பட்டது.
திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலை காமலாபுரம் அருகே சிறுமலை அடிவாரத்தில், வெள்ளிமலை கோயில் உள்ளது.
இப்பகுதியில் ஆழ்துளை மூலம் காமலாபுரத்திற்கு குடிநீர் செல்கிறது. இங்குள்ள அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இங்கு, ஜோசப் என்பவர் விவசாயம் செய்தார். சில நாட்களாக, சாயப்பட்டறை அமைக்க இயந்திரங்களை நிறுவினார். நேற்று, ஊராட்சி தலைவர் சீமோன் தலைமையில், கிராமத்தினர் திரண்டனர். 'பட்டறை அமைத்தால் குடிநீர் ஆதாரம் பாழாகும்,' என, எதிர்ப்பு தெரிவித்தனர். நிலக்கோட்டை தாசில்தார் செல்லத்துரை அங்கு வந்தார். போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, இயந்திரம் மூலம் சாயப்பட்டறை அகற்றப்பட்டது. இதே பகுதியில், கடந்த ஆட்சியில் சிலர், அனுமதி இன்றி கல் குவாரி நடத்தினர். மீண்டும் இவ்வாறு நடக்காமல் தடுக்க வேண்டும் என, கிராமத்தினர் கோரிக்கை விடுத்தனர்.