பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு
ADDED : செப் 10, 2011 01:13 AM
சென்னை:பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.செப்டம்பர் மற்றும் அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறியவர்களிடமிருந்து, சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதில் விண்ணப்பிக்கும், 'எச்' வகை தனித்தேர்வர்கள், ஒரு பாடத்திற்கு தேர்வுக் கட்டணமாக செலுத்தும் 85 ரூபாய் மற்றும் 'எச்.பி' வகை தனித்தேர்வர், ஒரு பாடத்திற்கு தேர்வுக் கட்டணமாக செலுத்தும் 187 ரூபாயுடன், 1,000 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும்.ஏற்கனவே தேர்வுக் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர், 1,000 ரூபாயை மட்டும், 'டிடி'யாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை, வரும் 12 முதல் 14ம் தேதி வரை, சென்னை, அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள் ஆகியவற்றில் பெறலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் 14ம் தேதிக்குள், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போருக்கு, சென்னையில் மட்டும் தேர்வுகள் நடக்கும்.இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.