Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை தடுக்க தனி சட்டம்:ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் தகவல்

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை தடுக்க தனி சட்டம்:ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் தகவல்

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை தடுக்க தனி சட்டம்:ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் தகவல்

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதை தடுக்க தனி சட்டம்:ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் தகவல்

ADDED : செப் 25, 2011 05:35 AM


Google News

ராமநாதபுரம்:''ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பவர்களை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்,'' என ராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் பேசினார்.

ராமநாதபுரத்தில் நடந்த 'லோக் அதாலத்' நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் வரவேற்றார். ஐகோர்ட் நீதிபதி மணிக்குமார் பேசியதாவது: தென்மாவட்டங்களில் சமீப காலமாக ஊரை விட்டு, ஒதுக்கி வைக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.



இந்த வழக்குகள் அதிகளவில் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. ஒரு சில வகுப்பினருக்கு சட்ட பாதுகாப்பு உள்ளது. ஆனால் ஊரை விட்டு ஒதுக்கப்பட்டர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்காதவாறு, மக்களை பாதுகாக்க சரியான வழியில், தனி சட்டம் இயற்ற வேண்டும். லோக் அதாலத் என்பது இந்தி மொழியில் இருப்பதால், பலருக்கு இது என்ன? என்பதே தெரியாமல் உள்ளது.



இதை 'மக்கள் மன்றம்' என்று மாற்றினால், மக்களிடையே பிரபலமாகும். அதற்கு போதிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.அந்த காலங்களில் கிராமப்புறங்களில் நடத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையே, இப்போதைய லோக் அதாலத். இது நீதித்துறையின் அங்கீகாரம் பெற்றுள்ளதால், முடிந்தளவு மக்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. வக்கீல்கள் நினைத்தால், சரியான வழியை போதித்து, சமூக மாற்றத்தையே உருவாக்கலாம், என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us