/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/தேயிலை செடிக்கு கவாத்து பணி தீவிரம்தேயிலை செடிக்கு கவாத்து பணி தீவிரம்
தேயிலை செடிக்கு கவாத்து பணி தீவிரம்
தேயிலை செடிக்கு கவாத்து பணி தீவிரம்
தேயிலை செடிக்கு கவாத்து பணி தீவிரம்
ADDED : ஜூலை 26, 2011 09:42 PM
வால்பாறை : வால்பாறையில் தென்மேற்குப்பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் தேயிலை செடிக்கு கவாத்து வெட்டும் பணி நடந்து வருகிறது.
வால்பாறையில் தேயிலை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேயிலை கோவை, குன்னூர், கொச்சி போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாதாரண தேயிலை தூள் கிலோ ரூ.200 க்கும், ஆர்கானிக் ரக தேயிலை தூள் கிலோ ரூ.800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வால்பாறையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருவதால் தேயிலை உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் தேயிலைக்கு 'கவாத்து' வெட்டும் பணி தீவிரமடைந்துள்ளது. வால்பாறை உபாசி தேயிலை ஆராய்ச்சியாளர்களிடம் கேட்ட போது, தேயிலை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் வால்பாறையில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேயிலை செடிக்கு காவாத்து வெட்டும் பணி நடந்து வருகிறது. கவாத்து வெட்டப்பட்ட பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு தேயிலை உற்பத்தி வேகுவாக அதிகரிக்கும். தற்போது தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்வதால் இந்த தருணத்தில் தேயிலைக்கு கவாத்து வெட்டுவது பயனுள்ளதாக அமையும் என்றனர்.