Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தோல், சாய ஆலைகளை கண்டித்து நாளை கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

தோல், சாய ஆலைகளை கண்டித்து நாளை கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

தோல், சாய ஆலைகளை கண்டித்து நாளை கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

தோல், சாய ஆலைகளை கண்டித்து நாளை கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 26, 2011 01:38 AM


Google News

ஈரோடு: தோல், சாய ஆலைகளை கண்டித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில், நாளை காலை 11 மணிக்கு, கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

கூட்டமைப்பின் அறிக்கை: உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, ஈரோடு மாவட்ட ஆலைகள், கழிவுநீரை நீர் நிலைகளில் கலக்கச் செய்கின்றன. இதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை, தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தோல் தொழிற்சாலை அதிபர்கள் இடமாற்றி வருகின்றனர். இதை கண்டித்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், நாளை காலை 11 மணிக்கு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமாரசாமி தலைமை வகிக்கிறார். மாநில தலைவர் ரத்தினசாமி, காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் முன்னிலை வகிக்கின்றனர். ஓய்வு பெற்ற நீதிபதி சின்னதுரை, கீழ்பவானி முறை நீர் பாசன கூட்டமைப்பு காசியண்ண கவுண்டர், முன்னாள் எம்.பி., பரமசிவம், பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சந்திரசேகர், பசுமை இயக்கம் ஜீவானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் துளசிமணி, கீழ்பவானி விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி, ஒரத்துப்பாளையம் பாசன சங்கம் கந்தசாமி உள்பட பலர் பங்கேற்கின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us