/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அவிநாசி அருகே மதுக்கடை கிராம மக்கள் கடும் எதிர்ப்புஅவிநாசி அருகே மதுக்கடை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
அவிநாசி அருகே மதுக்கடை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
அவிநாசி அருகே மதுக்கடை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
அவிநாசி அருகே மதுக்கடை கிராம மக்கள் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 01, 2011 10:08 PM
அவிநாசி : அவிநாசி அருகே கிராமத்தில் மதுக்கடை அமைக்க, பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அவிநாசி அருகே செம்மாண்டாம்பாளையத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை (எண்: 2268) செயல்பட்டு வருகிறது. அதை கோதபாளையத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு கோதபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோதபாளையத்தில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி, கலெக்டருக்கு பொதுமக்கள் அனுப்பிய மனு:செம்மாண்டாம்பாளையத்தில் எட்டு ஆண்டாக செயல்பட்டு வந்த மதுக்கடைய திடீரென்று கோதபாளையத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கின்றனர். மதுக்கடை அமைய உள்ள இடத்துக்கு மிக அருகில் பள்ளி, அங்கன்வாடி மையம், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், மாகாளியம்மன் கோவில் என மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் உள்ளன. மதுக்கடை அமைந்தால், 'குடி'மகன்களால் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். விசைத்தறி அதிகமுள்ளதால், அதில் பணியாற்றும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுவர். கோதபாளையம், குறுக்கபாளையம், காமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட 10 கிராம மக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மதுக்கடையை கோதபாளையத் தில் அமைக்கக் கூடாது. அவ்வாறு அமையும் பட்சத்தில் அனைத்து தரப்பினரும் இணைந்து போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம், என்று கூறியுள்ளனர்.