/உள்ளூர் செய்திகள்/சேலம்/3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி பொதுப்பணித்துறை செயலாளர் தகவல்3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி பொதுப்பணித்துறை செயலாளர் தகவல்
3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி பொதுப்பணித்துறை செயலாளர் தகவல்
3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி பொதுப்பணித்துறை செயலாளர் தகவல்
3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி பொதுப்பணித்துறை செயலாளர் தகவல்
ADDED : செப் 19, 2011 01:43 AM
மேட்டூர்:''டெல்டா மாவட்டங்களில், 3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி துவங்கியுள்ளது,'' என, பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் கூறினார்.
தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார், மேட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேட்டூர் அணை இடதுகரை, வலதுகரை பகுதியை பார்வையிட்டார். அணை கசிவுநீர் சுரங்கத்தை பார்வையிட்ட செயலாளர் சாய்குமார் அணை கட்டிடம் வழியாக சுரங்கத்தில் கசியும் ஸீபேஜ் நீரின் அளவை ஆய்வு செய்தார்.
பின்னர் செயலாளர் சாய்குமார் கூறியதாவது:மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ச்சியாக நீர்திறக்கப்பட்டுள்ளது.
தற்போது டெல்டா மாவட்டங்களில், 3.5 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி துவங்கியுள்ளது. தற்போது பாசனத்துக்கு தேவையான நீர் இருப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின்போது பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் விஸ்வா செல்வகுமார், கண்காணிப்பு பொறியாளர் கணேச மாரச்சன், உதவி செயற்பொறியாளர் குமாரசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.