ADDED : செப் 29, 2011 10:42 AM
வால்பாறை: வால்பாறை அருகே வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று கோழியை பிடித்து சென்றதால்அருகில் இருந்தவர்கள் பீதியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஈட்டியார் எஸ்டேட்டில் கடந்த ஒரு மாதகாலமாக சிறுத்தை ஒன்று, அங்கிருக்கும் ஆடு, கோழி, நாய் போன்றவற்றை பிடித்துச்சென்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை ஈட்டியார் எஸ்டேட்டைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த கோழி ஒன்றை தூக்கிச்சென்றது. சத்தம் கேட்டு அங்கு வந்தவர்களை பார்த்த சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் பீதியடைந்துள்ளனர்.