Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஏரியில் மணல் அள்ளிய மூன்று பேர் கைது

ஏரியில் மணல் அள்ளிய மூன்று பேர் கைது

ஏரியில் மணல் அள்ளிய மூன்று பேர் கைது

ஏரியில் மணல் அள்ளிய மூன்று பேர் கைது

ADDED : ஜூலை 24, 2011 01:02 AM


Google News

ப.வேலூர்: அனுமதியின்றி ஏரியில் மணல் அள்ளிய மூன்று பேரை, ப.வேலூர் போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ஒரு ஜே.சி.பி., இயந்திரம், இரு டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தனர்.

ப.வேலூர் அடுத்த எஸ்.வாழவந்தி ஏரியில், அனுமதியின்றி மணல் எடுப்பதாக வருவாய்த்துறையினருக்கு புகார் வந்தது. அதைத் தொடர்ந்து, ஆர்.ஐ., கோவிந்தராஜ், வி.ஏ.ஓ.,க்கள் தவமணி, சிவகாமி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட ஏரிக்கு சென்ற திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு சிலர் அனுமதியின்றி மணல் எடுப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து, மணல் அள்ளப் பயன்படுத்திய ஒரு ஜே.சி.பி.,யும், இரு டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து, ப.வேலூர் போலீஸில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், அந்தோணி, பிரகாஷ் உட்பட மூவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us