Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு தவிர்க்க கூடுதல் வாகனங்கள் வாங்கப்படுமா?

மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு தவிர்க்க கூடுதல் வாகனங்கள் வாங்கப்படுமா?

மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு தவிர்க்க கூடுதல் வாகனங்கள் வாங்கப்படுமா?

மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு தவிர்க்க கூடுதல் வாகனங்கள் வாங்கப்படுமா?

ADDED : ஜூலை 27, 2011 01:10 AM


Google News

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுக்க சுகாதாரப் பிரிவுக்கு தேவையான வாகனங்களை உடனே வாங்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில் குப்பை அகற்றும் பணியில் 526 துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 13 சுகாதார ஆய்வாளர்கள், 16 மேற்பார்வையாளர்கள் உள்ளனர். நாள்தோறும் சேகரிக்கப்படும் மக்கும், மக்காத குப்பை வெண்டிபாளையம் குப்பைக்கிடங்குக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உரமாக்கப்படுகிறது. சுகாதாரப் பிரிவில் குப்பைத்தொட்டிகளை ஏற்றிச்செல்ல எட்டு லாரிகள், இரண்டு டிராக்டர், ஒரு புல்டோஸர், குப்பையை அள்ள இரு தானியங்கி காம்பாக்டர், பாடி லாரி ஒன்று ஆகியவை உள்ளன. இவை பற்றாக்குறையாகவே உள்ளன. சுகாதாரப் பணியில் தொய்வு ஏற்படுகிறது. விரைவில் நான்கு நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதால், அவற்றின் மக்கள் தொகையையும் கணக்கில் கொண்டு துப்புரவு பணிக்கு கூடுதல் வாகனங்கள் தேவைப்படும். எனவே, கூடுதல் வாகனங்களை வாங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us