ADDED : செப் 18, 2011 10:15 PM
ஆனைமலை : ஆனைமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர்களுக்கான
புள்ளி விபர சேகரிப்பு பயிற்சி நடந்தது.
மாணவர்களின் சேர்க்கை, வருகை
பதிவு, தேர்ச்சி விகிதம், பள்ளியின் கட்டமைப்பு போன்ற பள்ளியின் அனைத்து
விபரங்களும் சேகரிப்பது குறித்த செயல் விளக்கம் மத்திய கல்வித்துறை மூலம்
வீடியோ கான்பரன்சிங் முறையில் விளக்கப்பட்டது. சந்தேகங்களுக்கும் பதில்
கூறப்பட்டது. ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 116 தொடக்க, நடுநிலை
அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்பள்ளிகளின் தலைமை
ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை
ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் பெரியம்மணி,
உதவி தொடக்கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ், கூடுதல் உதவி தொடக்கல்வி அலுவலர்
ராஜாமணி செய்திருந்தனர்.