ADDED : செப் 01, 2011 11:48 PM
கடலூர் : கடலூர் குப்பன்குளம் கெடிலம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள விஸ்வநாதீஸ்வரர் கோவில் திருப்பணியையொட்டி ஹோமங்கள் நடக்கிறது.
கடலூர் குப்பன்குளத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ ஷண்முக ஞானியார் சித்தர் பீடத்தில் விஸ்வநாதீஸ்வரர் கோவில் திருப்பணி நடக்க உள்ளது. இதையெட்டி இன்று (2ம் தேதி) காலை 7.30 மணி முதல் 10 மணி வரை கணபதி ஹோமம், மகா சண்டி ஹோமம், சுதர்சன ஹோமம் நடக்கிறது. பொதுமக்கள் ஹோமங்களில் பங்கேற்று அருள் பெற கோவில் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.