/உள்ளூர் செய்திகள்/மதுரை/வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்
வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்
வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்
வடக்கு மண்டல தலைவரின் முறைகேடு: விசாரணை தீவிரம்
ADDED : ஆக 29, 2011 12:36 AM
மதுரை : மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடந்த குளறுபடிகள் குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
இம்மண்டலத் தலைவராக இருப்பவர் தி.மு.க.,வைச் சேர்ந்த இசக்கிமுத்து. இவர் மீது 'மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு, கடைகள் ஒதுக்கீட்டில் குளறுபடி, சுகாதாரப்பணியாளர்கள் நியமனத்தில் பாரபட்சம், பராமரிப்பு பணிகளில் பங்கீடு,' என குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததே, இசக்கிமுத்து மீதான புகாருக்கு காரணம். பாதிக்கப்பட்டவர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். இந்த விபரங்களை சேகரிக்க போலீசார் மட்டுமே ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது மாநகராட்சி நிர்வாகமும் முன்வந்துள்ளது. இதன் மூலம் இசக்கிமுத்து மீது துறை ரீதியான நடவடிக்கையும் பாயும். இதேபோல் தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டல அலுவலக முறைகேடுகள் குறித்தும் விசாரிக்க உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.