/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/பெற்÷றார் மற்றும் கல்வி அதிகாரிகள் ஒ÷ர கட்டடத்தில் இரண்டு பள்ளிகள்பெற்÷றார் மற்றும் கல்வி அதிகாரிகள் ஒ÷ர கட்டடத்தில் இரண்டு பள்ளிகள்
பெற்÷றார் மற்றும் கல்வி அதிகாரிகள் ஒ÷ர கட்டடத்தில் இரண்டு பள்ளிகள்
பெற்÷றார் மற்றும் கல்வி அதிகாரிகள் ஒ÷ர கட்டடத்தில் இரண்டு பள்ளிகள்
பெற்÷றார் மற்றும் கல்வி அதிகாரிகள் ஒ÷ர கட்டடத்தில் இரண்டு பள்ளிகள்
ADDED : செப் 20, 2011 12:28 AM
காஞ்சிபுரம் : தரம் உயர்த்தப்பட்டு மூன்றாண்டுகளாகியும், கட்டடம் கட்ட இடம் ஒதுக்கப்படாததால், காரை உயர்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிக் கட்டடத்தில் இயங்குகிறது.காஞ்சிபுரத்திலிருந்து பரந்தூர் செல்லும் சாலையில், காரை ஊராட்சி உள்ளது.
இங்கு, 1962ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. பழைய கட்டடத்தில் இரண்டு வகுப்புகள், பள்ளிக்கு எதிர்புறம் கட்டப்பட்ட துணை பள்ளிக் கட்டடத்தில், இரண்டு வகுப்புகள் நடந்தது. பின், நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.மாணவர்கள் இடவசதியின்றி அவதிப்பட்டதால், 2004-05ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மூன்று வகுப்பறை கட்டடம், எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில், மூன்று வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.பள்ளிக்கு பின்புறம் உள்ள தெருவில், 2008ம் ஆண்டு 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ், மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.அதே ஆண்டில், உயர் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி தரம் உயர்த்தப்பட்ட போது, முதல் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஒரே பள்ளியில் படிக்கும் நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியாகவும், ஆறாம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை, அரசு உயர் நிலைப் பள்ளியாகவும் மாற்றப்பட்டது. தற்போது, துவக்கப் பள்ளியில் 153 மாணவர்கள், உயர்நிலைப் பள்ளியில் 235 மாணவர்கள் படிக்கின்றனர்.உயர்நிலைப் பள்ளிக்கு, தனி இடமோ, கட்டட வசதியோ இல்லை. இதனால், உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், தொடக்கப் பள்ளிக்கு சொந்தமான கட்டடத்திலே படித்து வருகின்றனர். பள்ளிக்கு எதிர்புறம் உள்ள துணை பள்ளிக் கட்டடத்தில் இரண்டு வகுப்புகள், பழைய கட்டடத்தில் ஒரு வகுப்பு, பள்ளிக்கு அருகில் உள்ள வாசக சாலை கட்டடத்தில் ஒரு வகுப்பு, பள்ளிக்கு பின்புறத் தெருவில் உள்ள கட்டடத்தில் இரண்டு வகுப்புகள் செயல்படுகின்றன. ஒரு வகுப்பில் தலைமை ஆசிரியர் அறை செயல்படுகிறது.இது குறித்து, ஊராட்சி தலைவர் மணி கூறும்போது,'ஊராட்சி குளம் புறம்போக்கு பகுதியில் 11 ஏக்கர் இடம் உள்ளது. அங்கு, உயர்நிலைப் பள்ளிக்கு இடம் பார்த்துள்ளோம். வருவாய் துறை அதிகாரிகளும், இடத்தை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்' என்றார்.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராணி கூறும்போது,'கிராம மக்கள் பள்ளிக்கு இடம் தேர்வு செய்து, பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டு கொடுத்தால், அதை கலெக்டருக்கு அனுப்புவோம். அதன்பின் கலெக்டர் அலுவலகத்திலிருந்து, சி.எம்.டி.ஏ., அப்ரூவலுக்கு கோப்பு அனுப்பப்படும். நிலம் பெயர் மாற்றம் செய்து வழங்கிய பின், கட்டடம் கட்ட நிதி பெற்றுத் தருவோம். இதுவரை பள்ளித் தலைமை ஆசிரியரோ, ஊராட்சியோ எங்கள் கவனத்திற்கு கொண்டு வரவில்லை' என்றார்.
என்.ஏ.கேசவன்


