ரோடு பராமரிப்பு தனியாரிடம் விட அரசு முடிவு
ரோடு பராமரிப்பு தனியாரிடம் விட அரசு முடிவு
ரோடு பராமரிப்பு தனியாரிடம் விட அரசு முடிவு
ADDED : செப் 06, 2011 11:58 PM
கம்பம்: தமிழகத்தில் 2 ,500 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட ரோடுகளை பராமரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ரோட்டின் நிலை, தேவை, பயன்பாடு போன்ற விபரங்களுடன், சென்னை ஐ.ஐ.டி. ஆய்வு நடத்தி அறிக்கை தர உள்ளது. மாநிலத்தில் 1950ல், 27 ஆயிரமாக இருந்த வாகன எண்ணிக்கை, 2011ல், ஒரு கோடியே 36 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் ரோடுகள் பராமரிப்பில் கவனம் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ஐ.ஐ.டி., பரிந்துரை கிடைத்தவுடன், பரிட்சார்த்த அடிப்படையில், சில ரோடுகளின் பராமரிப்பு தனியாரிடம் விடப்படும்.