மியான்மர் அதிபர், சூ கி பேச்சுவார்த்தை
மியான்மர் அதிபர், சூ கி பேச்சுவார்த்தை
மியான்மர் அதிபர், சூ கி பேச்சுவார்த்தை
UPDATED : ஆக 21, 2011 10:41 AM
ADDED : ஆக 20, 2011 09:52 PM

நேபையிடா : மியான்மர் ஜனநாயகத் தலைவர் அவுங் சான் சூ கி யும், அந்நாட்டின் புதிய அதிபர் தெய்ன் செய்னும் முதன் முறையாகச் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பில், அதிபர் தனக்கு நம்பிக்கை ஊட்டியதாக, சூ கி தெரிவித்துள்ளார். மியான்மரில் சமீபத்தில், ராணுவ ஆட்சி முடிந்து பார்லிமென்ட் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அதிபராக முன்னாள் ராணுவத் தளபதி தெய்ன் செய்ன் பதவியேற்றார். இதன்பின், மியான்மர் அரசு, ஜனநாயகப் போக்கில் விருப்பம் உடையதாகக் காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபடத் துவங்கியது.
தேசிய ஜனநாயக லீக் தலைவர் சூ கி யை, சமீபத்தில் ஓர் அமைச்சர் சந்தித்துப் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், நேற்று முன்தினம் தலைநகர் நேபையிடாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த வர்த்தகப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற சூச்சியும், அதிபரும் முதன் முறையாக சந்தித்து தனி அறையில், ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து நேற்று பேசிய சூ கி,'நான் அதிபரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாடு ஜனநாயக வழியில் செல்வது குறித்து, அதிபர் எனக்கு நம்பிக்கை ஊட்டினார்' என்று தெரிவித்தார். இச்சந்திப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது.