நெல்லையில் மறியல் : போக்குவரத்து நிறுத்தம்
நெல்லையில் மறியல் : போக்குவரத்து நிறுத்தம்
நெல்லையில் மறியல் : போக்குவரத்து நிறுத்தம்
ADDED : செப் 11, 2011 11:36 PM
திருநெல்வேலி: நெல்லையில் நேற்று இரவு, குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பரமக்குடி கலவரத்தால், நெல்லையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். சங்கரன்கோவில் பகுதியில் இருந்து பரமக்குடிக்கு வாகனங்களில் சென்றவர்கள், குருவிகுளம் அருகே உள்ள நாலுவாசன்கோட்டையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன், போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் மறியல் முடிவுக்கு வந்தது. தொலைதூர கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று காலையில் இருந்தே, டாஸ்மாக் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நெல்லை ஜங்ஷன் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கண்மணி மாவீரன் தலைமையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, போலீசார் கைது செய்தனர்.