/உள்ளூர் செய்திகள்/திருச்சி/பூப்பந்தாட்ட போட்டி நேரு கல்லூரி 2ம் இடம்பூப்பந்தாட்ட போட்டி நேரு கல்லூரி 2ம் இடம்
பூப்பந்தாட்ட போட்டி நேரு கல்லூரி 2ம் இடம்
பூப்பந்தாட்ட போட்டி நேரு கல்லூரி 2ம் இடம்
பூப்பந்தாட்ட போட்டி நேரு கல்லூரி 2ம் இடம்
ADDED : செப் 24, 2011 11:48 PM
துறையூர்: பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் நடந்த பூப்பந்தாட்டப்போட்டியில் புத்தனாம்பட்டி கல்லூரி இரண்டாமிடம் பெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் பூப்பந்தாட்டப் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரவாதி அருகே உள்ள மேலசிவபுரியில் உள்ள கணேசன் கல்லூரியில் நடந்துது. இதில், 11 கல்லூரிகள் பங்கேற்றன. இப்போட்டியில் புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரி சார்பில், மாணவியர் சுபாஷினி, கயல்விழி, சுதா, நந்தினி, சரண்பிரியா, சரண்யா, விஜி, காவியா குழுவினர் இரண்டாம் இடம் பெற்றனர். கணேசன் கல்லூரி செயலாளர் சிங்காரம், முதல்வர் மணி, பல்கலை உடற்கல்வி இயக்குனர் காளிதாஸ் ஆகியோர் வெற்றி பெற்றோருக்கு கோப்பை வழங்கினர். புத்தனாம்பட்டி கல்லூரி உடற்கல்வி இயக்குனர் சகாயலதா ராணி, பேராசிரியர் ஜெயராஜ் ஆகியோர் வாழ்த்தினர்.


