ADDED : ஆக 11, 2011 11:10 PM
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் காலனியைச் சேர்ந்த ஏழுமலை மகள் வித்யா,13.
இவர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8 ம் தேதி காலை பள்ளிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேல்மருவத்தூரில் இருந்த வித்யாவை மீட்டு வந்தனர். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.