ADDED : செப் 16, 2011 10:01 PM
நெகமம் : நெகமம் அடுத்துள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக லோகநாயகி பணியாற்றி வருகிறார்.
இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றிய காலத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட அளவில் முதல் மற்றும் மூன்றாம் இடங்களில் தேர்ச்சி பெற்றனர். 10ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் நான்காம் இடம் பெற்று தேர்ச்சி பெற்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் நடந்த விழாவில் தமிழக பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் சண்முகத்திடம் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.