/உள்ளூர் செய்திகள்/கரூர்/வெங்கமேட்டில் மின் திருட்டு ரூ.1.54 லட்சம் அபராதம்வெங்கமேட்டில் மின் திருட்டு ரூ.1.54 லட்சம் அபராதம்
வெங்கமேட்டில் மின் திருட்டு ரூ.1.54 லட்சம் அபராதம்
வெங்கமேட்டில் மின் திருட்டு ரூ.1.54 லட்சம் அபராதம்
வெங்கமேட்டில் மின் திருட்டு ரூ.1.54 லட்சம் அபராதம்
ADDED : செப் 27, 2011 12:03 AM
கரூர்: கரூர் மின்வாரிய உட்கோட்டத்துக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் நடந்த ஆய்வில் மின் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
கரூர் மின்வாரியத்துக்கு உட்பட்ட கரூர் கோட்டம் வெங்கமேடு பிரிவு அலுவலக மின் பகிர்மானங்களில் மின் வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தாழ்வழுத்த மின் இணைப்புகளில் மின்சாரம் திருடப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. திருடப்பட்ட மின்சாரத்துக்கு ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 371 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மின் திருட்டு பற்றி திருச்சி மின் திருட்டு தடுப்புக்குழு செயற்பொறியாளர் 94433-29851, உதவி செயற்பொறியாளர் 94431-53111 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்' என கரூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.