Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அடிப்படை வசதிகள் முழுமையடைவது...எப்போது? : மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலம்

அடிப்படை வசதிகள் முழுமையடைவது...எப்போது? : மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலம்

அடிப்படை வசதிகள் முழுமையடைவது...எப்போது? : மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலம்

அடிப்படை வசதிகள் முழுமையடைவது...எப்போது? : மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலம்

ADDED : ஆக 28, 2011 11:15 PM


Google News

விழுப்புரம் : விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு வரப்படும் நோயாளிகளை காப்பாற்ற விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சி.டி., ஸ்கேன் சாதனம் அமைக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முண்டியம்பாக்கத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் 150 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சராசரியாக 2,000க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெறு கின்றனர். தி.மு.க., ஆட்சி காலத்திற்குள் கட்டி முடிக்க வேண்டுமென்ற அவசரத்தில் திறக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு போதிய அடிப்படை சாதனங்கள் முழுமையாக அமைக்கப்படவில்லை. இம்மருத்துவமனைக்கு விபத்தில் அடிப்பட்டு வரும் நோயாளிகளுக்கு உடனடி சிகிச்சை அளிக்க வசதியாக சி.டி., ஸ்கேன் வசதி ஏற்படுத்தப் படவில்லை. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் புதுச்சேரி, சென்னை போன்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். மருத்துவமனை திறந்து ஓராண்டு ஆகியும் இன் னும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து செல்பவர்களும், நோயாளிகள் உறவினர்கள் வெளியில் காத்திருக்கும் வகையில் 'ஷெட்' வசதி அமைக்கப்படவில்லை. மருத்துவமனை வளா கத்தில் வாகனங்கள் நிறுத்த இடவசதியும் ஏற்படுத்தாததால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, அவசர சிகிச்சை பிரிவு எதிரில் ஏராளமான வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. பொதுமக்களுக்கு சிறுநீர் மற்றும் கழிவறை வசதி இல்லாமல், குறிப்பாக பெண்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். பொதுப்பணித்துறையினர் கட்டியுள்ள கட்டண கழிவறை திறக்கப்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் வெளியேற முறையான வடிகால் வசதிகள் செய்யப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மருத்துவமனையில் தினமும் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் பின்புறம் உள்ள காலி இடத்தில் கொட்டப்பட்டுள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. மருத்துவ கல்லூரி கடந் தாண்டு முதல் 100 மாணவர்களுடன் துவங்கியது. கல்லூரியை பொறுத்த வரை அனைத்து துறைகளுடன், தேவையான ஆய்வக வசதிகளுடனும், நூலகம், விடுதி வசதி உள்ளிட்ட வசதிகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருந்தாலும் மருத் துவக் கல்லூரிக்கான கட் டுமான பணிகள் இன் னும் முழுமை அடைய வில்லை. மருத்துவமனைக்கு எதிரே நுழைவு வாயிலில் ஆக்கிரமித்துள்ள சில்லரை கடைகளால் ஆம்புலன்ஸ் வாகன ஓட்டிகள் மற்றும் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி இந்த மருத்துவமனையில் அத்தியாவசிய தேவையான சி.டி., ஸ்கேன் சாதனத்தை பொருத்திட உள்ளூர் அமைச்சர் சி.வி.சண்முகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us