திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், பணம் வைத்து காட்டன் மற்றும் மங்காத்தா சூதாட்டம் விளையாடிய, 10 பேரை, போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக எஸ்.பி., வனிதாவுக்கு தகவல் வந்தது.
சோழவரம் பகுதியில் பணம் வைத்து, மங்காத்தா சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்த பொன்னேரி ரமேஷ்,38, தட்சணாமூர்த்தி,37, ஜனப்பன்சத்திரம் ரமேஷ்,38, பாலாஜி,41, சஞ்சீவி,37, சந்திரபோஸ்,44, மற்றும் பாஸ்கர்,36, ஆகிய ஏழு பேரை, சோழவரம் போலீசார் கைது செய்தனர்.புதுப்பட சி.டி.,க்கள் விற்றவர் கைது: செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே, புதுப்பட சி.டி.,க்கள் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் அடுத்த, செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே, புதுப்பட சி.டி.,க்கள் விற்பதாக வந்த தகவலையடுத்து, செவ்வாப்பேட்டை எஸ்.ஐ., பாலாஜி மற்றும் போலீசார் திடீர் சோதனை செய்தனர்.அப்போது, ரயில் நிலையம் அருகே, புதுப்பட சி.டி.,க்களை விற்றுக் கொண்டிருந்த கன்னிகாபுரம் முஷாபர் இப்ராகிம் மகன் அன்சாரி, 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.