/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஏரி பாதை தார் சாலையாக மாறுமா?எம்.எல்.ஏ.,விடம் எதிர்பார்ப்புஏரி பாதை தார் சாலையாக மாறுமா?எம்.எல்.ஏ.,விடம் எதிர்பார்ப்பு
ஏரி பாதை தார் சாலையாக மாறுமா?எம்.எல்.ஏ.,விடம் எதிர்பார்ப்பு
ஏரி பாதை தார் சாலையாக மாறுமா?எம்.எல்.ஏ.,விடம் எதிர்பார்ப்பு
ஏரி பாதை தார் சாலையாக மாறுமா?எம்.எல்.ஏ.,விடம் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 25, 2011 02:02 AM
பனமரத்துப்பட்டி:ஒண்டிக்கடையில் இருந்து பனமரத்துப்பட்டி ஏரிக்கு செல்லும்,
40 அடி அகலம் கொண்ட பாதை, ஆக்கிரமிப்பில் சிக்கி ஒத்தையடி பாதையாக மாறி
உள்ளது. கரடு முரடாக காட்சியளிக்கும் பாதையை தார்சாலையாக மாற்ற வேண்டும்
என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சேலம் மாநகர் மக்களின்
குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, 1911ம் ஆண்டு, ஜருகுமலை அடிவாரத்தில்,
2,700 ஏக்கர் பரப்பளவில் பனமரத்துப்பட்டி ஏரியை ஆங்கிலேயர்கள்
உருவாக்கினர்.
சேலம் மெயின் ரோட்டில் இருந்து பனமரத்துப்பட்டி ஏரிக்கு
செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. சேலம் ரோட்டில், ஏரிரோடு என்ற இடத்தில்
இருந்து பிரியும் தார்ரோடு அடிக்கரை வழியாக, ஏரியின் முகப்பு பகுதிக்கு
செல்கிறது. இந்த தார்ரோடு சேலம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.சேலம்
ரோட்டில், ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து துண்டுக்கரை வழியாக,
பனமரத்துப்பட்டி ஏரிக்குள் மண் ரோடு செல்கிறது. பனமரத்துப்பட்டி
பேரூராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மண் ரோட்டையொட்டி, 300க்கும் மேற்பட்ட
விவசாய குடும்பங்கள் உள்ளன. 18 அடி முதல் 40 அடி அகலம் வரை உள்ள மண் ரோடு
ஆக்கிரமிப்பில் சிக்கி, ஒத்தையடி பாதையாக மாறிஉள்ளது. கரடு முரடாக உள்ள மண்
ரோட்டின் இரு புறத்திலும் முள் புதர்கள் வளர்ந்துள்ளதால், ரோட்டில் செல்ல
முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரம்மபடுகின்றனர்.
ஒண்டிக்கடை- துண்டுக்கரை வழிதடத்திற்கு சரியான பாதை இல்லாததால், ட
அடிப்படை வசதிகள் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு
நேரத்தில் கும்மிருட்டில், கரடு முரடான பாதையில் அப்பகுதி மக்கள் செல்ல
வேண்டிய பரிதாபம் உள்ளது. ஒண்டிக்கடை முதல் துண்டுக்கரை வரை தார்சாலை
அமைக்க கோரி, கடந்த ஐம்பது ஆண்டுகளாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்தும், அதை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் முன்வரவில்லை.இது குறித்து
ஒண்டிக்கடை, துண்டுக்கரை, அடிக்கரை பகுதியை சேர்ந்த விவசாயிகள்
கூறியதாவது:ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப்பில் இருந்து துண்டுக்கரைக்கு செல்லும்
பாதையில் ஏராளமாக விவசாயிகள் உள்ளனர். தார்ரோடு, தெருவிளக்கு, குடிநீர்
உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. பகல் நேரத்தில் மண் ரோட்டில் கிடக்கும்
ஜல்லி, கல், முட்களுக்குள் தட்டுதடுமாறி சென்று விடுகிறோம். ஆனால், இரவில்
நடமாடவே முடியவில்லை. மழை பெய்யும் நாட்களில் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ
ஜந்துக்கள் பாதையில் கிடக்கும்.ஒரு சில இடங்களில் மண் ரோடு ஆக்கிரமிப்பு
செய்யப்பட்டதால், ரோடு குறுகி உள்ளது. அ.தி.மு.க., எம்.எல்.ஏ., செல்வம்
ஒண்டிக்கடை முதல் பனமரத்துப்பட்டி ஏரி வரை தார்சாலை அமைத்து, தெருவிளக்கு,
குடிநீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள்
கூறினர்.


