ADDED : செப் 21, 2011 11:12 PM
விருத்தாசலம்:கருவேப்பிலங்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில்
குறுவட்ட கருத்தாய்வு மையக் கூட்டம் நடந்தது.மைய ஒருங்கிணைப்பாளர்
கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார்.
சாத்துக்குடல், வண்ணான்குடிகாடு உள்ளிட்ட 15
பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் பங்கேற்றனர். கருத்தாளர்கள் கவுரி, ஜெகதீசன்
செயல்வழி கற்றல் அட்டைகள் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சி அளித்தனர்.வட்டார
வளமைய மேற்பார்வையாளர் ராஜமாணிக்கம் ஆலோசனைகள் வழங்கினார்.