/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் உள்ளாட்சி தேர்தல்அலுவலருக்கான பயிற்சி வகுப்புஅரியலூரில் உள்ளாட்சி தேர்தல்அலுவலருக்கான பயிற்சி வகுப்பு
அரியலூரில் உள்ளாட்சி தேர்தல்அலுவலருக்கான பயிற்சி வகுப்பு
அரியலூரில் உள்ளாட்சி தேர்தல்அலுவலருக்கான பயிற்சி வகுப்பு
அரியலூரில் உள்ளாட்சி தேர்தல்அலுவலருக்கான பயிற்சி வகுப்பு
ADDED : அக் 05, 2011 01:32 AM
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு, தேர்தல்
பணியில் ஈடுபடவுள்ள ஓட்டு சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டு பதிவு
அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
அரியலூர் அரசு
மேல்நிலை பள்ளி, கீழப்பழுவூர் அரசு மேல்நிலை பள்ளி, தா.பழூர் அரசு மேல்நிலை
பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலை பள்ளி, ஆண்டிமடம் அரசு மேல்நிலை பள்ளி,
செந்துறை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த பயிற்சி
வகுப்புகளை, மாவட்ட கலெக்டர் அனு ஜார்ஜ் துவக்கி வைத்து
பேசியதாவது:உள்ளாட்சி தேர்தல் சம்பந்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில்
கூறப்படும் கருத்துகளை தெளிவாகவும், கவனமாகவும் கேட்டு தெரிந்து
கொள்ளவேண்டும். இந்த பயிற்சி வகுப்பு மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஓட்டு பதிவுக்கான செயல் முறைகளை
கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


