பணத்தை திருப்பிக் கொடுக்காத தம்பதியைஅடித்து உதைத்த போலீஸ்காரருக்கு சிறை
பணத்தை திருப்பிக் கொடுக்காத தம்பதியைஅடித்து உதைத்த போலீஸ்காரருக்கு சிறை
பணத்தை திருப்பிக் கொடுக்காத தம்பதியைஅடித்து உதைத்த போலீஸ்காரருக்கு சிறை
ADDED : ஆக 23, 2011 04:38 AM
புதுடில்லி:வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காததற்காக தம்பதியையும், அவர்களின் உறவுப் பெண்ணையும் அடித்து உதைத்து, கோடாரியால் தாக்கிய, போலீஸ்காரருக்கும், அவரின் நண்பருக்கும் டில்லி கோர்ட் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது.டில்லியைச் சேர்ந்தவர் சமர்சிங். இவருக்கு டில்லி போலீசில் பணியாற்றும் போலீஸ்காரர் சுனில் குமார், பணம் கடன் கொடுத்திருந்தார்.
இந்தக் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் சமர்சிங் காலம் தாழ்த்தி வந்தார். இதனால், கோபம் கொண்ட சுனில், 2004 ஜூலையில் தன் நண்பர் பிஜேந்தர் குமாருடன் சமர்சிங் வீட்டிற்குச் சென்று, அவரது மனைவியையும், தங்கையையும் தகாத வார்த்தைகளால் திட்டினார்.
அதற்கு அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவே, வெளியே சென்ற சுனிலும், அவரின் நண்பரும் மீண்டும், இரவு 10 மணியளவில் கோடாரியுடன் வந்து, சமர்சிங், அவரது மனைவி மற்றும் சமர்சிங்கின் சகோதரியை கடுமையாகத் தாக்கினர். படுகாயமடைந்த அவர்கள் மூன்று பேரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக, போலீசில் புகார் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, தான் சம்பவ இடத்திலேயே இல்லை என்பதை காட்டிக் கொள்ள, போலீஸ்காரர் சுனில் முற்பட்டார். அதற்கேற்ற, சில சாட்சிகளையும் தயார் செய்தார்.
ஆனால், அவரின் தந்திரத்தை கோர்ட் புரிந்து கொண்டது. பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிப்பதே சரியானது என, ஏற்றுக் கொண்டது. வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காததற்காக, சமர்சிங் தம்பதியையும், சமர்சிங் சகோதரியையும் தாக்கிய போலீஸ்காரர் சுனில் குமார் மற்றும் அவரின் நண்பர் பிஜேந்தர் குமாருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, டில்லி கூடுதல் செசன்ஸ் நீதிபதி உத்தரவிட்டார்.'தனக்கும், தன் நண்பருக்கும் தண்டனைக்கு பதிலாக தலா, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்' என்ற போலீஸ்காரர் சுனிலின் வேண்டுகோளையும் நீதிபதி நிராகரித்து விட்டார்.