ADDED : ஆக 14, 2011 02:36 AM
பொள்ளாச்சி : தியாகராஜ சுவாமிகள் நாதஸ்வர தவில் இசைக் கலைஞர்கள் சங்கம்
சார்பில், பொள்ளாச்சி சக்தி திருமண மண்டபத்தில், 18ம் ஆண்டு ஆராதனை இசை
விழா நடந்தது.மகா கணபதி ஹோமம், மங்கள இசையுடன் ஆராதனை விழா துவங்கியது.
100க்கணக்கான இசைக் கலைஞர்கள் நாதஸ்வரம், தவில், சாக்ஸபோன் வாசித்து,
தியாகராஜ சுவாமிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இசைக் கலைஞர்களுக்கு நடந்த
பாராட்டு விழாவில், சேலம் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் ஹேமநாதன்
தலைமை வகித்தார். கலைஞர்களுக்கு பாராட்டு சான்றும், விருதும்
வழங்கப்பட்டது. ஆஞ்சநேயர் உற்சவ விழா நடந்தது.