/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் தனித்து போட்டியிடும் பா.ம.க.,வின் வெற்றி... கேள்விக்குறிசேலத்தில் தனித்து போட்டியிடும் பா.ம.க.,வின் வெற்றி... கேள்விக்குறி
சேலத்தில் தனித்து போட்டியிடும் பா.ம.க.,வின் வெற்றி... கேள்விக்குறி
சேலத்தில் தனித்து போட்டியிடும் பா.ம.க.,வின் வெற்றி... கேள்விக்குறி
சேலத்தில் தனித்து போட்டியிடும் பா.ம.க.,வின் வெற்றி... கேள்விக்குறி
சேலம் : சேலம் மாநகராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள, பா.ம.க., 60 வார்டுகளில் வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
இவர்களில் மாஜி எம்.எல்.ஏ., கார்த்தி நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இடைப்பாடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அவர் தோல்வியை தழுவிய நிலையிலும், அவருக்கு கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அந்த தேர்தலில், பா.ம.க., இளைஞர் சங்க செயலாளர் அருளுக்கு போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு, புதிதாக பதவி எதையும் கட்சியின் மேலிடம் வழங்க வில்லை. இதனால், கார்த்தி, அருளின் ஆதரவாளர்களுக்கு இடையே பனிப்போர் தொடர்கிறது. இந்நிலையில் சேலம் மாநகர மேயர் பதவி பொதுப்பிரிவாக மாற்றப்படும் என்பதால், அந்த பதவிக்கு அருள் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். அவ்வாறு அவர் போட்டியிடும் பட்சத்தில், மேயர் பதவிக்கு நான்கு முனை போட்டி ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பா.ம.க., சார்பில் நிறுத்தப்படுபவர் தேறுவது கடினம். கடந்த உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட, பா.ம.க., சேலம் மாநகரில், 6, 7, 16, 22, 24, 25, 27, 51, 57, 60 ஆகிய வார்டுகளில் போட்டியிட்டது.
ஆனால், ஐந்தாண்டுகளில், பா.ம.க., தேர்தலுக்கு தேர்தல் அணி மாறியதோடு, ஆளும் கட்சியாக இருந்த, தி.மு.க.,வுடன் இணக்கமான போக்கை மேற்கொள்ளாததால், தங்களின் வார்டுகளின் தேவைகளை கவுன்சிலர்களால் பூர்த்தி செய்து கொடுக்க இயலவில்லை. இதனால் இந்த வார்டுகளில், பா.ம.க.,கவுன்சிலர்களுக்கு அதிருப்தியே நிலவுகிறது. அது மட்டுமின்றி கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சியின் ஆதரவுடன், 16, 25, 51, 57, 60 ஆகிய வார்டுகளில் போட்டியிட்டு குறைந்த ஓட்டுக்களில் தோல்வியை சந்தித்த, பா.ம.க., இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், ஓட்டுக்கள் பிரியும் நிலையில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியமில்லை. கூட்டணியில் இணைந்து, கடந்த தேர்தலில், 10 வார்டுகளில் மட்டுமே போட்டியிட்ட, பா.ம.க., நடப்பு தேர்தலில், 60 வார்டுகளில் போட்டியிட முடிவு செய்து கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல் தோல்வியில் இருந்து மீளாத, பா.ம.க.,வினர் இந்த தேர்தலில் போட்டியிட அக்கறை காட்ட வில்லை.
இதனால் அனைத்து வார்டுகளிலும் வேட்பாளர்களை நிறுத்த கட்சி நிர்வாகிகள் பெரும் முயற்சி மேற் கொண்டு வருகின்றனர். அப்படியே, 60 வார்டுகளில் போட்டியிட்டாலும், வெற்றி என்பது அக்கட்சிக்கு அவ்வளவு எளிதானதாக இருக்காது, என கட்சியினர் புலம்புகின்றனர்.


