Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சாக்கடை, கழிவுநீர் பாதையில் அடைப்புதாராபுரம் - காங்கேயம் சாலையில் அவலம்

சாக்கடை, கழிவுநீர் பாதையில் அடைப்புதாராபுரம் - காங்கேயம் சாலையில் அவலம்

சாக்கடை, கழிவுநீர் பாதையில் அடைப்புதாராபுரம் - காங்கேயம் சாலையில் அவலம்

சாக்கடை, கழிவுநீர் பாதையில் அடைப்புதாராபுரம் - காங்கேயம் சாலையில் அவலம்

ADDED : செப் 19, 2011 01:24 AM


Google News
காங்கேயம்: காங்கேயத்தில், தாராபுரம் ரோட்டில், சாக்கடை செல்லும் வழி மூடப்பட்டதால், வீடுகளில் வெளியேறும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது.காங்கேயம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. தெருக்களில் இருந்து மெயின் ரோட்டுக்கு வந்து சேரும் கழிவுநீர், மெயின் ரோட்டை ஒட்டிய சாக்கடையில் செல்ல முடியாமல், பல இடங்களில் சாக்கடை முறையாக பராமரிக்கப்படாமல் மணல் மூடி, குப்பைகள் தேங்கி கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்குகிறது. திருப்பூர், சென்னிமலை, கோவை, கரூர் ரோடுகளில் நகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே சிறிய குட்டைகளை ஏற்படுத்தி கழிவுநீரை தேக்கி வைக்கிறது. நகராட்சி பகுதியில் இருந்து சேரும் கழிவுநீர் தற்போது, அகிலாண்டபுரம் குளத்தில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.தாராபுரம் ரோட்டை ஓட்டி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையை ஒட்டியுள்ள மெயின் சாக்கடை வழியாக எதிர்புறமுள்ள அகிலாண்டபுரம் குளத்துக்கு செல்ல தனியார் இடம் வழியாக சென்றது.

அந்த இடத்தில் உரிமையாளர் மண்கொட்டி சீரமைத்ததால், கழிவுநீர் செல்ல வழியின்றி, ஆங்காங்கே குட்டை போல தேங்கி கிடக்கிறது. கழிவுநீர் குட்டைகள், கொசுக்களின் புகலிடமாக உள்ளதுடன், துர்நாற்றம் வீசி, தொற்றுநோய் பரப்புகிறது.இக்குளத்தில் கழிவுநீர் சேர்வதால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, குளம் சார்ந்த பாசன பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த தி.மு.க., ஆட்சியில் தமிழகத்தில், வருவாய் குறைந்த நகராட்சியில் கூட பாதாள சக்கடை திட்டம் அமைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டது. காங்கேயம் நகராட்சி வருவாய் அதிகம் இருந்தும் இத்திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. நகராட்சி பகுதியில் சேரும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வுக்கு, காங்கேயத்திலிருந்து 5 கி.மீ., தூரமுள்ள வட்டமலை கரை ஓடையில், கழிவுநீரை கொண்டு சேர்க்கும் திட்டம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. இதனால் காங்கேயம் நகராட்சி பகுதிகளில் கோவை, கரூர், திருப்பூர், சென்னிமலை ரோடுகளின் ஓரங்களில் கழிவுநீர் குட்டைகள் அதிகரித்து வருகிறது.நகராட்சி நிர்வாகம் மெயின் ரோட்டை ஒட்டியுள்ள சாக்கடைகளில் தூர் வாரி, கழிவுநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us