Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

விபத்தில் திருப்பூர் வாலிபர் பலி

ADDED : ஜூலை 28, 2011 09:31 PM


Google News
ஆனைமலை : ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி அருகே பைக் மரத்தில் மோதி வாலிபர் இறந்தார்.திருப்பூர் சேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(30). திருப்பூரில் உள்ள தனியார் மொபைல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பிஜூமோல்(30). இவர்களுக்கு தனுஜா(5) என்ற குழந்தையும் உள்ளது.

கார்த்திக் தனது குடும்பத்துடன் நேற்றுமுன்தினம் பேஷன் பிளஸ் பைக்கில் ஆழியார் சென்றுள்ளார். அங்கலக்குறிச்சி அருகே சென்றபோது நாய் திடீரென்று குறுக்கே வந்துள்ளது. நாயின் மீது பைக் ஏறி ரோட்டின் அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி இறந்தார். கார்த்திக்கின் மனைவி மற்றும் குழந்தை கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஆழியார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us