ADDED : செப் 19, 2011 01:18 AM
ஈரோடு: தேசியமயமாக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி கிளை, டாக்டர் அகர்வால் கண்
மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் வங்கியின்
கணக்கு துவங்கும் முகாம் ஈரோட்டில் நடந்தது.டாக்டர் ராதாகிருஷ்ணன் துவக்கி
வைத்தார்.
வாடிக்கையாளர்கள், தொழில்முனைவோர், பணியாளர்களுக்கு பரிசோதனை
நடந்தது.வங்கி கணக்கு துவங்கும் விழாவில், வங்கி முதன்மை மேலாளர் நடராஜன்
பேசுகையில், ''அனைவரும் வங்கி கணக்கு துவங்கி, திட்டமிட்ட சேமிப்பின் மூலம்
பணவீக்கம் மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளித்து பொருளாதார முன்னேற்றம் காண
இந்த சேமிப்பு விழா உறுதுணையாக இருக்கும்,'' என்றார். மதிவாணன் நன்றி
கூறினார்.