தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு
தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு
தம்பதியிடம் 10 சவரன் செயின் பறிப்பு
ADDED : ஆக 06, 2011 02:18 AM
பரங்கிப்பேட்டை : மோட்டார் பைக்கில் வந்த தம்பதியரிடம் 10 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டையைச் சேர்ந்தவர் விஜயரங்கன்.
இவரது மனைவி மஞ்சுளா, 27; இருவரும் நேற்று இரவு 8 மணிக்கு புதுச்சேரியில் இருந்து சிதம்பரத்திற்கு மோட்டார் பைக்கில் வந்தனர்.கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே அவர்களைத் தொடர்ந்து மோட்டார் பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர் மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 10 சவரன் செயினை அறுத்துக் கொண்டு தப்பினர். மோட்டார் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் மஞ்சுளா காயமடைந்தார்.புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


