/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்
துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்
துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்
துடுப்பதி அரசு பள்ளியில் கட்டாய நன்கொடை வசூல்
ADDED : ஆக 05, 2011 02:04 AM
பெருந்துறை: துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம், பள்ளி நிர்வாகம் கட்டாய நன்கொடை வசூலிப்பதாக, மாவட்ட கலெக்டருக்கு ஊர் மக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
கடிதத்தில் கூறியுள்ளதாவது: துடுப்பதி அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி நிர்வாகம் ஆறாம் வகுப்புக்கு 250 ரூபாய், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புக்கு 300 ரூபாய், ஒன்பது மற்றும் 10ம் வகுப்புக்கு 350 ரூபாய், ப்ளஸ் 1 மற்றும் ப்ளஸ் 2 வகுப்புக்கு 400 முதல் 1,200 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. தனியார் பள்ளியில் நன்கொடை கொடுக்க முடியவில்லை என்பதால்தான், அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறோம். மாவட்ட கலெக்டர் தலையிட்டு, பள்ளி வசூல் செய்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.