/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை., பள்ளியில் மின் கசிவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்புபாளை., பள்ளியில் மின் கசிவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
பாளை., பள்ளியில் மின் கசிவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
பாளை., பள்ளியில் மின் கசிவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
பாளை., பள்ளியில் மின் கசிவு தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு
ADDED : ஆக 03, 2011 12:36 AM
திருநெல்வேலி : பாளை., தனியார் பள்ளியில் மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாளை., புனிதவதியார் தெரு ரோட்டில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி அருகேயுள்ள டிரான்பார்மரில் இருந்து தான் பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் டிரான்ஸ்பார்மரில் தீப்பொறி வருவதாக பள்ளி தரப்பில் இருந்து போன் மூலம் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். அப்போது பள்ளிக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ள மெயின் அறையில் இருந்து கருகி கரும்புகை வெளியேறியது. இதனால் பதட்டமடைந்த பள்ளி ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பக்கத்து அறைகளில் இருந்த மாணவர்களை உடனடியாக வெளியேற்றினர். இதையடுத்து டிரான்பார்மரை ஆப் செய்ய மின்வாரிய ஊழியர்கள் சென்றனர். அதற்குள்ளாக பாளை., தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு மின்கசிவால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிதுநேரத்தில் அந்த அறையில் இருந்த மற்ற சாதனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. மின் கசிவினால் ஏற்பட்ட விபத்து சரிசெய்யப்பட்டது. அதிக மின் அழுத்தம் காரணமாக மின் கசிவு தீ விபத்து ஏற்பட்டதாக மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர். ஆனால் டிரான்ஸ்பார்மரில் இருந்து தீ பரவவில்லை எனவும் மின்வாரிய ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளியில் இருந்த மின் இணைப்பு மீட்டர் போர்டு கருகி சேதமடைந்தது.