/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரயில்வே மேற்கு நுழைவு வாயிலில் முறைப்படுத்தப்படாத ஆட்டோக்கள்ரயில்வே மேற்கு நுழைவு வாயிலில் முறைப்படுத்தப்படாத ஆட்டோக்கள்
ரயில்வே மேற்கு நுழைவு வாயிலில் முறைப்படுத்தப்படாத ஆட்டோக்கள்
ரயில்வே மேற்கு நுழைவு வாயிலில் முறைப்படுத்தப்படாத ஆட்டோக்கள்
ரயில்வே மேற்கு நுழைவு வாயிலில் முறைப்படுத்தப்படாத ஆட்டோக்கள்
ADDED : ஆக 31, 2011 01:17 AM
மதுரை : மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் ஆட்டோக்களை முறைப்படுத்தி, அதிக கட்டணம் வசூலிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் கிழக்கு, மேற்கு நுழைவு வாயிலில் அனுமதி பெற்ற ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு அனுமதி கட்டணம் ரூ.1120. இரண்டு நுழைவு வாயில்களுக்கும் சேர்த்து ரூ.2240 . கிழக்கு நுழைவு வாயிலில் 300 ஆட்டோக்கள் இயங்குகின்றன. மேற்கிற்கு சில ஆட்டோக்கள் மட்டும் அனுமதி பெற்றுள்ளன. ஆனால் இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அனுமதி இல்லாமல் இயங்குகின்றன. குறிப்பிட்ட ஒரு சங்கத்திற்கு பணம் செலுத்தினால் போதும், ரயில்வே நிர்வாகத்திற்கு அனுமதி கட்டணம் செலுத்த வேண்டாம் என தெரிவித்து வருவதால், ரயில்வேக்கு அனுமதி கட்டணம் இழப்பு ஏற்படுகிறது. கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள ஆட்டோ கட்டணத்தை விட மேற்கு நுழைவு வாயில் ஆட்டோக்களில் கட்டணம் அதிகம். கிழக்கு நுழைவு வாயிலில் டி.ஆர்.பி., ஆர்.பி.எப்., மற்றும் உள்ளூர் போலீசாரை வைத்து கண்காணிப்பு செய்வது போல், மேற்கு நுழைவு வாயிலில் எவ்வித கண்காணிப்பும், இல்லை. ரயில்வே நிர்வாகம் கிழக்கு நுழைவு வாயில் பகுதியை முறையாக கண்காணிப்பது போல், மேற்கு நுழைவு வாயில் பகுதியையும் கண்காணித்து, ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.


