/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று வணிகர்களுக்காக சிறப்பு திருப்பலிபனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று வணிகர்களுக்காக சிறப்பு திருப்பலி
பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று வணிகர்களுக்காக சிறப்பு திருப்பலி
பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று வணிகர்களுக்காக சிறப்பு திருப்பலி
பனிமய மாதா பேராலய பெருவிழாவில் இன்று வணிகர்களுக்காக சிறப்பு திருப்பலி
ADDED : ஆக 03, 2011 12:08 AM
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத் பெருவிழாவில் இன்று வணிக பெருமக்களுக்காக சிறப்பு திருப்பலி நடக்கிறது.
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தின் 429வது ஆண்டு பேராலயத் பெருவிழா வெகுசிறப்பாக நடந்து வருகிறது. பெருவிழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று குரூஸ்புரம் பங்கு இறைமக்கள், அன்னாள் சபை கன்னியர்கள், கலைமனைகள், கால்டுவெல் காலனி பங்கு இறைமக்கள், தாளமுத்துநகர் பங்கு இறைமக்கள், பொம்பெய் மாதா சபையினர், அமலோற்பவ மாதா இளம் பெண்கள், நகரத் துறவறத்தார், முத்துநகர் மரியாயின் சேனையாளர்களுக்கான சிறப்பு திருப்பலிகள் நடந்தது. இன்று காலை 6.30 மணி க்கு தூய அந்தோணியர் ஆல ய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை சபை அருட்சகோதரிகள், திருச்சிலுவை ஆங்கில மற்றும் தமிழ் பள்ளி மாணவிகள், ஆசிரியர்களுக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு நவநாள் திருப்பலி நடக்கிறது. 8.30 மணிக்கு வெள்ளப்பட்டி, தருவைக்குளம் பங்கு இறைமக்களுக்காவும், 9.30 மணிக்கு வணிக பெருமக்களுக்கான சிறப்பு திருப்பலியும் நடக்கிறது. 11 மணிக்கு உலக சமாதானத்திற்காக சிறப்புத் திருப்பலி நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு ஏழுகடல்துறை மக்களுக்கான திருப்பலி நடக்கிறது. இரவில் பாளையங்கோ ட்டை டிஎஸ்எஸ்., இயக்குநர் கென்னடி 'மரியாளின் தூய்மையும், வாய்மையும் என்ற தலைப்பில் மறையுரையாற்றுகிறார்.