
'அம்மா பாணியில்...!'
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில், ராஜரத்தினம் தலைமையில், விஜயகாந்த் மன்றத்தினர், அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
'அமைச்சர் பொளச்சுக்குவார்!'
ஊட்டியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா சமீபத்தில் நடந்தது. இதில், உணவுத்துறை அமைச்சர் புத்தி சந்திரன் பங்கேற்று பேசினார். அப்போது, 'தேர்தல் வாக்குறுதிபடி வீட்டுக்கு ஒரு பசு மாடு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவித்து, நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். இதை அறிவித்தபோது,'போகிற போக்கில் எல்லாரையும் மாடு மேய்க்க போகச் சொல்லிடுவாங்க போலிருக்கே' என, மற்ற கட்சியினர் விமர்சனம் செய்தனர். வீட்டுக்கு ஒரு பசு மாடு இருந்தால், கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி குடியிருக்கிற வீடாக மாறும். அதனால் செல்வம் பெருகும். வீட்டில் எல்லா வளமும் வந்து சேரும். மாடு என்றால் சாதாரணம் அல்ல' என்றார். இதைகேட்ட பெரியவர் ஒருவர், 'தட்டுத்தடுமாறி பேசிய அமைச்சர், இப்போது மக்களை கவரும் வகையில் பேசி, 'புத்தி'சந்திரனாகவே மாறிட்டார்; பொளச்சுக்குவார்' என, கமாண்ட் அடித்தபடி சென்றார்.


