தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
தமிழக முதல்வருக்கு நன்றி அறிவிப்பு
ADDED : செப் 04, 2011 02:22 AM
திருக்கோவிலூர்:பகுதி நேர கலையாசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என
அறிவித்த முதல்வருக்கு தமிழ்நாடு கலைஆசிரியர் சங்கம் நன்றி
தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் குருராஜன்
விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 16,549 பகுதி நேர கலையாசிரியர்கள்
தையல், கை தொழி லாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம்
செய்யப்படுவர் என அறிவித்தது பயிற்சி முடித்து வேலையின்றி இருப்பவர்களுக்கு
மகிழ்ச்சிய ளிக்கிறது.
இதன் மூலம் வேலை வாய்ப்பு பெறும் கலையாசிரியர்கள் சார்பில் தமிழக முதல்வர்
ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சண்முகத்திற்கு நன்றி தெரிவித்து
கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


