/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அரசு திட்டங்கள்: புதுகையில் அமைச்சர் பெருமிதம்பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அரசு திட்டங்கள்: புதுகையில் அமைச்சர் பெருமிதம்
பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அரசு திட்டங்கள்: புதுகையில் அமைச்சர் பெருமிதம்
பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அரசு திட்டங்கள்: புதுகையில் அமைச்சர் பெருமிதம்
பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற அரசு திட்டங்கள்: புதுகையில் அமைச்சர் பெருமிதம்
புதுக்கோட்டை: ''தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை போன்ற அ.தி.மு.க., அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது,'' என்று அமைச்சர் சுப்பிரமணியன் பேசினார்.
இதன் தொடர்ச்சியாக தற்போது 500 பெண்களுக்கு தலா நான்கு கிராம் வீதம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 படித்துள்ள 398 பெண்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும், பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்துள்ள 102 பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களிடையே உயல்கல்வி படிக்கவேண்டும் என்ற ஆர்வமும், சிந்தனையும் உருவாகும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய இத்திட்டங்கள், குறிப்பாக தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை போன்றவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் நலனுக்கான இத்திட்டங்கள் தொடர நீங்கள் அனைவரும் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., அரசுக்கு உறுதுணையாகவும் இருக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், எம்.பி., குமார், எம்.எல்.ஏ., க்கள் விஜயபாஸ்கர், வைரமுத்து, கு.ப.கிருஷ்ணன், அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமையா, டி.ஆர்.ஓ., சாம்பசிவம், திட்ட இயக்குனர் ராதா, மாவட்ட சமூக நல அலுவலர் விஜயதரணி, பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் காஞ்சனா உட்பட பலர் கலந்துகொண்டனர்.


