/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/என்னது...! காட்டு நாயக்கன் சமூகத்தை காணோமா?கலெக்டருக்கு வந்த அதிர்ச்சி மனுஎன்னது...! காட்டு நாயக்கன் சமூகத்தை காணோமா?கலெக்டருக்கு வந்த அதிர்ச்சி மனு
என்னது...! காட்டு நாயக்கன் சமூகத்தை காணோமா?கலெக்டருக்கு வந்த அதிர்ச்சி மனு
என்னது...! காட்டு நாயக்கன் சமூகத்தை காணோமா?கலெக்டருக்கு வந்த அதிர்ச்சி மனு
என்னது...! காட்டு நாயக்கன் சமூகத்தை காணோமா?கலெக்டருக்கு வந்த அதிர்ச்சி மனு
ADDED : ஜூலை 13, 2011 02:11 AM
கோவை : கடந்த 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப் பின்படி, காட்டு
நாயக்கன் சமுதா யத்தினர் இல்லை என வெளியாகியுள்ள தகவலுக்கு, மக்கள்
எதிர்ப்பு தெரிவித் துள்ளனர்.
பொள்ளாச்சி தாலுகா, 'இந்து காட்டு நாயக்கன்
நலச்சங்கத்தினர்' கலெக்டரிடம் அளித்த மனு: சென்றாம்பாளையத்தில் வரும்
உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் சமூகத்துக்கு வார்டு உறுப்பினர் பதவிக்கு இட
ஒதுக்கீடு வழங்க கோரி மனு அளித் தோம். இதற்கு பதில் அளித்த வளர்ச் சிப்
பிரிவு அதிகாரிகள், 'தேவராயபுரம் உள் ளாட்சியில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுப் பின்படி, பழங்குடி வகுப்பினர் ஒருவரும் இல்லை; தனியாக இட
ஒதுக்கீடு செய்ய முடியாது' என்று பதில் தெரிவித்துள்ளனர். இது உண்மைக்கு
புறம்பான தகவல். எங்கள் ஊரில் 100 ஆண்டுகளாக மூன்று தலைமுறை மக்கள் வசித்து
வருகின்றனர். பஞ்சாயத்தில் வீட்டு வரியும், 15 ஆண்டுகளாக தண்ணீர் வரியும்
செலுத்தி வருகிறோம். ஆனால், 2001ல் ஒரு குடும்பம் கூட இல்லை என்கிறார்கள்.
இது எங்கள் சமுதாயத்தினர் வாழ்ந்தது, வாழ்ந்து கொண்டிருப்பதையே மறைப்பதாக
உள்ளது. 200 ரேஷன் கார்டுகள், 100 ஜாதிச் சான்றிதழ்கள் சான்றாக உள்ளன.
2001ல் நடந்த கணக்கெடுப்பின்போது, எங்கள் இனத்தை கணக்கெடுக்காதது ஏமாற்றம்
அளிக்கிறது. முறையான படிப்பறிவு, விழிப்புணர்வு இல்லாததாலும், அரசு இட
ஒதுக்கீட்டில் போதுமான சலுகை கிடைக்காததாலும் மோசமான பொருளாதார
சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறோம். யாரோ ஒரு அரசு அதிகாரி செய்த தவறால்,
எங்கள் இனத்துக்கே அரசு வழங்கும் நலத்திட்டங்கள் கிடைக்காத நிலை
ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.