/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டிகோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
கோவில்பட்டியில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
ADDED : ஜூலை 27, 2011 02:22 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் நடந்த மாநில அளவிலான வாலிபால் இரண்டாம் நாள் போட்டியில் கோவில்பட்டி அணி உட்பட நான்கு அணிகள் அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.கோவில்பட்டி இந்தியன் ஸ்டார் கைப்பந்து கழகத்தின் வெள்ளி விழா ஆண்டு மற்றும் 13வது மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி வாலிபால் போட்டி கடந்த ஜூலை 21ம் தேதி துவங்கியது. போட்டியின் இரண்டாம் நாள் ஆறு போட்டிகள் நடந்தது. முதல் போட்டியில் தருவைக்குளம் செயிண்ட் மைக்கேல் அணியும் ராஜபாளையம் சிட்டி வாலிபால் கிளப் அணியும் மோதியதில் 21-25, 25-18, 25-17 என்ற புள்ளி கணக்கில் தருவைக்குளம் செயிண்ட் மைக்கேல் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் மதுரை மதுரா கல்லூரி அணியும், திருநெல்வேலி சாரா வாலிபால் அகடமி அணியும் மோதியது. இதில் சாரா வாலிபால் அணி 25-15, 25-19 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடந்த மூன்றாவது போட்டியில் மதுரை சரஸ்வதிபாண்டியன் மெமோரியல் பெண்கள் அணியும், தூத்துக்குடி ஹோலிகிராஸ் பெண்கள் அணியும் மோதியதில் 25-19, 25-20 என்ற புள்ளி கணக்கில் சரஸ்வதிபாண்டியன் மெமோரியல் அணி வெற்றி பெற்றது.
நான்காவது போட்டியில் விருதுநகர் வி.வி.வி.கல்லூரி பெண்கள் அணியும், நாகர்கோவில் ஹோலிகிராஸ் பெண்கள் அணியும் மோதியது. இப்போட்டியில் வி.வி.வி.கல்லூரி அணி 25-18, 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.அதனை தொடர்ந்து நடந்த ஐந்தாவது போட்டியில் திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி அணியும், மதுரை சரஸ்வதிபாண்டியன் மெமோரியல் ஆண்கள் அணியும் மோதியதில் 25-18, 25-23 என்ற புள்ளி கணக்கில் ஜமால் முகம்மது கல்லூரி வெற்றி பெற்றது. கடைசியாக நடந்த ஆறாவது போட்டியில் தருவைக்குளம் செயிண்ட் மைக்கேல் அணியும், மதுரை மதுரா கல்லூரி அணியும் மோதியது. இதில் தருவை செயிண்ட் மைக்கேல் அணி 25-18, 25-18 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாம் நாள் அரையிறுதிப் போட்டியில் செயிண்ட் மைக்கேல் கல்லூரி, சாரா வாலிபால் அகடமி, ஜமால் கல்லூரி மற்றும் சாரா ஜூவல்லர்ஸ் ஆகிய அணிகள் மோதியது.