/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
விநாயகர் சதுர்த்தி சிலைகள் பிரதிஷ்டை ஏற்பாடு தீவிரம்
தர்மபுரி: தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் பிரதிஷ்டை செய்ய வசதிகள் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தர்மபுரி நகரில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஹிந்து அமைப்புகள் சார்பில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்வேறு ஆன்மிக அமைப்புகள் சார்பில் கோவில் இருக்கும் பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்க வசதியாக அந்தந்த பகுதியில் கூடாரங்கள், பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தகர தடுப்புகள் கொண்டு கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் ஹிந்து அமைப்பினரும், இளைஞர் மன்றங்கள், ஆன்மிக அமைப்பினர் ஈடுபட்டுள்ளனர். விநாயகர் சதர்த்தியையொட்டி நகரின் முக்கிய பகுதிகள், சிலைகள் பிரதிஷ்டை செய்யும் இடங்களில் நாளை முதல் போலீஸ் பாதுகாப்பு பணிக்கும், இரவு நேரங்களில் ரோந்து பணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
* 'அரூர் பகுதியில் 125 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது,'' என டி.எஸ்.பி., சம்பத் பேசினார். அரூர் சப் டிவிஷனுக்கு உட்பட்ட அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், கோட்டப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்ற சதூர்த்தி பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அரூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.
அரூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் வரவேற்றார். டி.எஸ்.பி., சம்பத் பேசியதாவது : அரூர் பகுதியில் 125 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு பொது இடங்களில் வைக்கப்படுகிறது. சிலை அமைப்பாளர்களும், போலீஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவார்கள். போலீஸார் அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்வது குறித்து போலீஸாருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும். ஊர்வலம் செல்லும் போது, பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


